மைத்திரிக்கு கஸ்ட காலம்!



ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களான மனோ கணேசன் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments