மைத்தியின் வாக்குமூலம் நாளை?
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய அறிக்கை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாளை (திங்கட்கிழமை) வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடத்தியது யார் என தனக்கு தெரியும் என நேற்று முன்தினம் கருத்து தெரிவித்தார் இந்நிலையில் மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நேற்று (23) பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்

Post a Comment