ஜனாதிபதி தேர்தல்: ரணில் வந்தார்!



யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த மக்களின் 234 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுவிக்கப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாகியுள்ள நிலையில் மக்களின் காணிகள் கையளிக்கும் நிகழ்வு அச்சுவேலி வயாவிளான் பகுதியில் இன்று இடம்பெற்றது.

அதற்கமைய ஜே- 244 வயாவிளான் கிழக்கு , ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு , ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த காணிகனே விடுவிக்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவுக்கும் இடையில் எதிர்காலத்தில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்  தேர்தல் தொடர்பில் பேச்சுக்கள் நடந்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பசில் ராஜபக்ச இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். என்றாலும், ரணிலின் நிலைப்பாடு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக இருந்துள்ளது.

இந்நிலையில் அவசர அவசரமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ரணில் விக்கிரமசிங்க காணி விடுவிப்பில் பங்கெடுத்திருந்தார்.

வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள்  விடுவிக்கப்படும் நடவடிக்கையில்   278 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

 

No comments