அமைச்சர் வருகை:போராட்டம் முடிவு!



இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரி நான்கு நாட்கள் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப் போராட்டம் எதிர்பார்க்கப்பட்டது போன்று இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியால் கைவிடப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணை தூதரகத்திற்கு அருகாமையில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு போர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை நான்காம் நாளும் போராட்ட தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் உணவு தவிப்புப் போராட்டத்தில் ஈடுபடும் 4 பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து வருகின்றது என்று அவர்களைப் பரிசோதித்த வைத்தியர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் மீனவர்கள் பொறுமை இழந்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ;ள இந்திய துணை தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் துணை தூதரகத்திற்குள் நுழைவதற்கு முயற்சிகளை மேற்கொண்;டனர்.

இதனிடையே போராட்டகாரர்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசினேன்.

பாண்டிச்சேரி முதலமைச்சர் எல்லை தாண்டும் மீனவர்களைத் தடுப்பது தொடர்பில் எழுத்து மூலமான உறுதிமொழி தந்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் கடிதம் அனுப்பத் தயாராக இருப்பதாகவும், தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையகத்துடன் ஆலோசித்து கடிதம் அனுப்புவதாகவும் கூறியிருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.


No comments