காசாவில் இதுவரை 30,800 பலி: 2,298 பேர் காயம்!!
காசாவில் போரில் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30,800 என்று ஹமாஸ் நடத்தும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கு இடையே ஆறாவது மாதத்திற்குள் நுழைந்த போரின் போது பிரதேசத்தில் குறைந்தது 30,800 பேர் கொல்லப்பட்டதாக இன்று வியாழக்கிழமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 83 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர். அக்டோபர் 7 அன்று போர் வெடித்ததில் இருந்து காசாவில் 72,298 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
Post a Comment