மெக்சிக்கோவில் 66 பேர் கடத்தப்பட்னர்: கடத்தப்பட்டவர்களில் 42 பேர் மீட்பு!!
மெக்சிக்கோவின் வடமேற்கு மாநிலமான சினாலோவாவில் கிரிமினல் குழுக்களால் நேற்று முன்தினம் 66 பேர் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்டவர்களில் 18 குழந்தைகள் உட்பட 42 பணயக்கைதிகளை மீட்டதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
66 பேர் காணாமல் போனதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இப்போது அதில் 42 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். கடத்தப்பட்ட மீதமுள்ள 24 பேரைத் தேடும் பணி தொடர்கிறது.
சினலோவா (Sinaloa) போதைப்பொருள் விற்பனையாளர்களின் சொந்த இடமாகும். இப்பகுதியில் பாதுகாப்புப்ப படையினர், சிறப்புப் படைகள், கூடுதல் வீரர்கள் மற்றும் காவல்துறையினர் என ஒரு பட்டாலியன் பேர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குலியாக்கனைச் சுற்றியுள்ள பகுதியில் வெகுஜன கடத்தல்கள் அதிகரித்துள்ளன. இப்பகுதியானது இழிவான சினலோவா போதைப்பொருள் கடத்தலின் தாயகமாகும். இந்த கிரிமனல் குழுவின் தலைவர் தலைவர் ஜோவாகின் "எல் சாப்போ" குஸ்மான் தற்போது அமெரிக்காவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

Post a Comment