பங்களாதேஷ் தீ விபத்து: 43 பேர் உயிரிழப்பு


பங்களாதேஷில்  வணிகம் மற்றும் குடியிருப்பாளர்கள் வசித்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சர்  சமந்தா லால் சென் தெரிவித்தார்.

தலைநகர் டாக்காவில் வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி சுமார் 22:00 மணியளவில் கச்சி பாய் உணவகத்தில் தீப்பிடித்தது. இத் தீ கட்டிடத்தின் வழியாக வேகமாக ஏழு மாடிக்கும் பரவியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 33 பேர் இறந்துவிட்டதாக பங்களாதேஷ் சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென் தெரிவித்தார்.

நகரின் பிரதான தீக்காய மருத்துவமனையில் குறைந்தது 10 பேர் இறந்தனர். மேலும் டஜன் கணக்கானவர்கள் சிகிச்சைக்காக அங்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று சமந்தா லால் சென் கூறினார்.

கட்டிடம் இருக்கும் வளாகத்தில் மற்ற உணவகங்கள் மற்றும் பல ஆடை மற்றும் மொபைல் போன் கடைகள் உள்ளன.

No comments