மின்சாரமும் விற்பனையில்?



வடபுலத்திலிருந்து மீள்புதுப்பிக்க சக்தி ஊடாக ஜயாயிரம் மெகா வாட்;ஸ் மின்சாரத்தை பெற இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.எனினும் அரசின் முயற்சிகளிற்கு மன்னார் மற்றும் பூநகரியில் கடுமையான எதிர்ப்புக்கள் கிளர்ந்துள்ள,

இந்நிலையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே கடலுக்கடியில் மின்வடம் மூலமாக மின்சாரத்தினை விநியோகிக்கும் இணைப்பை அமைப்பது தொடர்பாக இரண்டு நாடுகளும் செயற்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

120 கோடி அமெரிக்க டொலர் செலவில் கடலுக்கடியில் மின்வடம் மூலமாக இருநாடுகளுக்கும் இடையே மின்சாரத்தினை விநியோகிக்கும் இணைப்பை அமைப்பது தொடர்பாக இருநாடுகளும் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எரிசக்தித் துறை ஒத்துழைப்புக்கான இந்தியா-இலங்கை கூட்டு பணிக் குழுவின் 5-ஆவது கூட்டம் கொழும்பில் கடந்த 28-ஆம் திகதி இடம்பெற்றது, இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜாவும் பங்கேற்ற கூட்டத்தில் இலங்கை - இந்தியா மின் இணைப்புத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வட மத்திய நகரமான அனுராதபுரம் மற்றும் இந்தியாவின் சென்னைக்கும் இடையே மின்சாரம் கடத்தும் நேரடி இணைப்பு இத்திட்டத்தில் அமைக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தியாவில் 130 கி.மீ. தொலைவுக்கு நிலம் வழியாகவும், அதன் பிறகு இலங்கையின் மன்னார் பகுதிவரை கடலுக்கடியில் மின்வடம் மூலமாகவும் மின் இணைப்பு நிறுவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்; திட்டம் தொடா்பாக தொழில்நுட்ப மதிப்பீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையொப்பமிட்டுள்ளன. மேலும், சட்ட கட்டமைப்புக்குள் இத்திட்டத்தை செயற்படுத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments