தொலைபேசிகள் விற்பனைக்கு என விளம்பரம் செய்து , வாங்க வருபவர்களிடம் பணம் கொள்ளை - ஒருவர் சுட்டுக்கொலை


பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் கொள்ளை சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு கொள்ளை சந்தேக நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

குருநாகல் நாரம்மல பகுதியில்,  இலட்ச ரூபாய்கள் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் விற்பனைக்கு உண்டு என பத்திரிகைகளில் விளம்பரம் செய்து , அதனை வாங்க தொடர்பு கொள்பவர்களை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து , தொலைபேசி வாங்குவதற்காக கொண்டு வந்த பணத்தினை கொள்ளையிட்டு வந்துள்ளனர். 


சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்த வேளை , கொள்ளையர்கள் பொலிஸார் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

அதனால் பொலிஸார் கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் கொள்ளையர்களில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் ஏனைய இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 

காயமடைந்தவரை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

அதேவேளை, கையடக்க தொலைபேசியை கொள்வனவு செய்ய என வந்த இருவர் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தப்பி சென்ற இரு கொள்ளையர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்னர். 


No comments