தலையில் மண் போடும் சஜித்!

 


ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக இன அழிப்பின் பங்காளிகளான இலங்கை இராணுவ தளபதிகளை கட்சிக்குள் இணைப்பதில் ஜக்கிய மக்கள் சக்தி மும்முரமாகியுள்ளது. 

வ்வகையில் முன்னாள் இராணுவ தளபதியும், இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்துள்ளார்;.

இலங்கை இராணுவத்தின் 54 ஆவது தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே இன்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து, ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது ஆதரவை தெரிவித்து இணைந்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட இவர் ‘ஊழல் எதிர்ப்பு கொள்கை மற்றும் அமுலாக்கல் பிரிவின் பிரதானியாகவும்’எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊழல் எதிர்ப்புப் பயணத்தின் ஆலோசகராகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் இன்றைய தினம் நியமிக்கப்பட்டார்.

மூன்று தசாப்த கால யுத்தத்தில் பாரிய பங்களிப்பைச் செய்த அவர், இராணுவத் தளபதியாக பணியாற்றுவதற்கு முன்னர் இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதி மற்றும் மேற்கு பாதுகாப்பு படையின் தளபதி உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே புதிய படைத்தளபதிகளது இணைப்பு ஜக்கிய மக்கள் சக்தியினுள் பிளவுகளை தோற்றுவித்துள்ளதுடன் இராணுவ தளபதியாக இருந்த சரத்பொன்சேகா முரண்டுபிடித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.


No comments