யேர்மனி வூப்பெற்றால் பள்ளியில் கத்திக்குத்து: மாணவர்கள் காயம்!

மேற்கு யேர்மனியில் தமிழர்கள் அதிகமாக வாழும் வூவ்பெற்றால் (Wuppertal) நகரில் உள்ள பாடசாலையில் மாணவன் ஒருவன் கத்தி குத்து தாக்குதல் நடத்தியதில் பலர் இன்று வியாழக்கிழமை மாணவர்கள் பலர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய மாணவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர்.

இச்சம்பவம் உயர் பள்ளியில் நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் சென்றனர். பாடசாலையில் வான் பகுதியில் உலங்குவானூர்தி வட்டமிட்டது.

நகரின் எல்பர்ஃபெல்ட் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு அருகில் உறவினர்களுக்கான தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இப்பள்ளியில் சுமார் 700 மாணவர்கள் படிக்கின்றனர்.

No comments