முடக்கம்:இந்திய தூதர் டக்ளஸ் சந்திப்பு!
கச்சதீவு உற்சவத்தை இந்திய யாத்திரீகர்கள் புறக்கணித்துள்ள நிலையில் யாழிலுள்ள இந்திய துணைதூதரகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு மீனவ அமைப்புக்கள் மறுபுறம் முடக்கி போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் சந்தோஸ் ஜா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்திய தூதுவரின் அழைப்பினைத் தொடர்ந்து மேற்படி சந்திப்பு இன்று நடைபெற்றதாக தெரியவருகின்றது.
முன்னதாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய புதிய தூதர் டக்ளஸை சந்திப்பதை தவிர்த்திருந்தார்.
இந்நிலையில் இந்திய தூதர் திரும்பிய அடுத்த தினம் யாழிலுள்ள இந்திய துணைதூதரகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு மீனவ அமைப்புக்கள் மறுபுறம் முடக்கி போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸை இந்திய தூதர் சந்தித்து பேசியுள்ளார்.
Post a Comment