தேசபந்து தென்னகோன் சாதனைகள் !
தென்னகோன் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஞ்சித் சுமங்கலாவை எனும் சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்த குற்றவாளி என்று இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது
மேல் மாகாணத்தின் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக (SDIG) கடமையிலிருந்த போது பொலிஸ் காவலிலிருந்த 24 பேர் மரணமடைந்ததுடன் 13 சந்தேகநபர்கள் என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டு இருந்தனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) குற்றம் சாட்டி இருந்தது
தென்னகோன், SDIG ஆக இருந்த போது, பிரபல மனித உரிமைகள் செயல்பட்டாளர் Tharindu Jayawardena என்பவருக்கு சமூக தளங்கள் ஊடக கொலை அச்சுறுத்தல் விடுத்தது இருந்தார்
தென்னகோன், 2009 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சே அவர்களால் ஊடகவியலாளர் Poddala Jayantha கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்புடைய ஆதாரங்களை மறைத்த அதிகாரியாக அடையாளம் காணப்பட்டு இருந்தார்
மே 9, 2022 யன்று மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள், சனத் நிசாந்த தலைமையில் அரக்கலய போராட்ட காரர்கள் மீது நடத்திய கோரமான வன்முறையை தடுக்க தவறி இருந்தார்
தென்னகோன்,கோட்டாபய ராஜபக்சே தப்பியோடிய பின்னர் ஜனாதிபதி மாளிகையில் ரூபா 17,850,000 பணத்தை நீதிமனறத்திற்கு பதிலாக அமைச்சர் Tiran Alles வசம் ஒப்படைக்குமாறு வற்புறுத்தி விவகாரத்தை கையாண்ட பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தி இருந்தார்
தென்னகோன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் ஒன்றில் பயணித்த ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய லொறியொன்றை தடுக்க வேண்டாம் என அங்கு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அழைத்து உத்தரவு வழங்கி இருந்தார்
தென்னகோன், ஈஸ்டர் தாக்குதல் உட்பட பலவேறு முக்கிய வழக்குகளை கையாண்ட குற்ற புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் Shani Abeysekara அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறியதுடன் அவரை கைது செய்து இருந்தார்
மேற்படி சாதனைகளுக்குரிய தேசபந்து தென்னகோன் அவர்களை ரணில் விக்ரமசிங்கே புதிய பொலிஸ் மா அதிபராக நியமித்து இருக்கின்றார்
Post a Comment