சம்பில்துறை கடலில் இறங்க தடையாம்!
யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என இலங்கை கடற்படையினர் உள்ளுர் மீனவர்களிற்கு தடை விதித்துள்ளனர்.
சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்றொழிலாளர்களுக்கு கடற்படையினர் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில், அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , அப்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட கடற்படையினர் அனுமதித்தனர்.
தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி, விகாரையின் பின் பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவித்துள்ளார்.
அத்துடன் அப்பகுதிக்கு அருகில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டால் கடற்படையினர் உள்ளுர் மீனவர்களை தாக்கிவருவதாக கடற்றொழில் அமைப்புக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன.
ஏற்கனவே உயர்பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் தற்போது கடலிலும் மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது.
Post a Comment