நயினாதீவில் முன்னெடுக்கப்படவுள்ள கலப்பு மின் திட்ட இடங்களை இந்திய உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார்


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

யாழ்ப்பாணம் விஜயம் செய்த  உயர்ஸ்தானிகர் முன்னதாக நயினாதீவுக்கு சென்று நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், நயினாதீவு நாகவிகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் இந்திய திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கலப்பு மின் திட்ட இடங்களையும் பார்வையிட்டு ஆராய்ந்தார்.

தொடர்ந்து காங்கேசன்துறை துறைமுகம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற உயர்ஸ்தானிகர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.







No comments