ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலேக்ஸி நவல்னி சிறையில் மரணம்
ரஷ்யாவின் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவரான அலேக்ஸி நவல்னி ஆர்க்டிக் வட்டத்திற்குள் உள்ள சிறையில் மரணமடைந்ததாகச் ரஷ்யாவின் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மிகக் கடுமையான விமர்சகராகப் பார்க்கப்பட்ட நவல்னி, 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.
கடந்த ஆண்டு இறுதியில் அவர் கடினமான சிறைகளில் ஒன்றாக கருதப்படும் ஆர்க்டிக் தண்டனை காலனிக்கு மாற்றப்பட்டார்.
இன்று வெள்ளிக்கிழமை நடைப்பயணத்திற்குப் பிறகு அவர் உடல்நிலை சரியில்லாமல் சுயநினவை இழந்தார். உடனடியாக ஒரு அவசர மருத்துவக் குழுவை வரவழைத்து அவரின் உயிரைக் காப்பாற்ற அவசர சிகிற்சைகள் வழங்கப்பட்டன. ஆனால் அவரின் உயிரைக் காப்பற்ற முடியவில்லை என்று யமலோ - நேனெட்ஸ் மாவட்டத்தில் உள்ள சிறைச் சேவை தெரிவித்துள்ளது.
அவரது மரணத்திற்கான காரணங்களை அறிய உடற்கூறு ஆய்வுகள் நடைபெற்று வருவதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment