7வருடங்கள்:பலவீனமாகின்றது போராட்டம்!




இலங்கை அரசும் அதன் விசுவாசியாக மாறியுள்ள தமிழ் தலைமைகளும் மௌனம் காத்துவருகின்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களது போராட்டம் ஏழாவது ஆண்டினை தாண்டியுள்ளது.

யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இருப்பிடத்தை அறிய வேண்டி ஏழு வருடங்களாக உண்மையைக் கண்டறியும் வேட்கையை நிறைவு செய்யும் வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.

போராட்டமானது இன்று செவ்வாய்கிழமை காலை கிளிநொச்சியில் கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமாகி ஏ-9 வீதி ஊடாக டிப்போ சந்தியில் உள்ள சிறப்பு நினைவுச்சின்னம் வரை பயணித்திருந்தது.

போராட்டத்தில், எமது பிள்ளைகளை காணாமல் ஆக்க செய்தவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குரல்களை எழுப்பியிருந்தனர்.

போராட்டத்தில் சமயத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் சிங்கள மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான நீதி கோரிய போராட்டம் அண்மைக்காலமாக பலவீனமாகிப்போகின்றமை கவலையை தோற்றுவித்துவருகின்றது.


No comments