சீனாவிற்கு எதிராக போராட்ட அழைப்பு!



சீனாவிற்கு எதிராக தமிழர்கள் போராடவேண்டுமென அண்மையில் யாழ்ப்பாணம் வந்து திரும்பிய இந்திய தூதர் தெரிவித்துள்ள நிலையில் இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டு யாழில் போராட்டம் நடந்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழிலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக கடற்றொழிலாளர்களில் ஒரு பிரிவினர்; போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பகுதி கடற்றொழிலாளர் சங்கங்கள் இணைந்து இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் தூதுவராலயம் முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலை 11 மணியளவில் கடற்றொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்ட பேரணியாக தூதுவராயத்தை நோக்கி முற்றுகையிட சென்ற போது தூதுவராலயத்திற்கு அருகாமையில்; காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் ஏழு பேர் மட்டும் தூதுவராலயத்திற்கு சென்று துணை தூதுவரைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

போராட்டகாரர்கள் இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்;.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்தியாவின் இலங்கைக்கான புதிய தூதர் தமிழ் கட்சிகளது தலைவர்களை சந்தித்த போதும் அரச தரப்பு தமிழ் கட்சி தலைவர்களை சந்தித்திருக்கவில்லை.


No comments