சுமந்திரனால் முடியாது: தவராசா!


தமிழரசுக்கட்சி தலைமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் தமிழரசுக் கட்சிக்காக வாதாடுவதற்கு எம்.ஏ.சுமந்திரன் முன்வந்த நிலையில்,  வழக்கில் சுமந்திரன் சாட்சியாக மட்டுமே முன்னிலையாகமுடியும். தவிர, தமிழரசுக் கட்சிக்காக வாதாடுவது சட்டத்திற்கு முரணானது என மற்றொரு கட்சி பிரமுகரும் சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

அதேவேளை 'தமிழ் அரசுக்கட்சியை பாதுகாப்பேன் என்று சுமந்திரன் கூறுவது பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவிக்கும் செயல்' என்றும்n கே.பி. தவராஜா தெரவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழு எடுத்திருந்த தீர்மானங்களுக்கு எதிராகவும், தேசிய பேராளர் மாநாட்டுக்கு எதிராகவும் திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் பெறப்பட்டுள்ள இடைக்கால நீதிமன்ற கட்டாணைகள் தொடர்பாக எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையில், கட்சியின் தலைவர்களும் வழக்கின் எதிராளியாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் தனது சகாக்களும் கேட்டுக் கொண்டால் கட்சிக்காக தான் முன்னிலை ஆவதற்கும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

யாழ்ப்பாணத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தமிழரசு கட்சிக்கு புதிதாகத் தேர்வான தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கு எழுதப்பட்ட கடிதம் ஆவணமாக இணைக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் வேளையில் சுமந்திரன் நீதிமன்றத்திற்கு ஒரு சாட்சியாகவே அழைக்கப்பட முடியும்.  

வழக்கின் சாட்சியாக அழைக்கப்படும் எவரேனும் அந்த வழக்கில் மற்றைய எதிராளிக்காக முன்னிலையாவது நடைமுறையில் சாத்தியமற்ற விடயமாகும்.

அத்தோடு திருகோணமலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 6ம் எதிராளியாக சுமந்திரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். எனவே எதிராளி தனக்குத் தானே வாதாட முடியுமே தவிர கட்சிக்காகவோ அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிற எதிராளிகளுக்காகவோ எக்காரணம் கொண்டும் வாதாடுவதில்லை.  அவர் தன்னை காத்துக் கொள்ள தனக்காக மட்டுமே வாதாடமுடியும் எனவும் தவராசா தெரிவித்துள்ளார்.No comments