சுவீடன் புலனாய்வு அமைப்பின் தலைமையகத்தில் மர்மச் சம்பவம்: 8 பேர் மருத்துவமனையில் அனுமதி!!
சுவீடனில் புலனாய்வு அமைப்பான சுவீடன் பாதுகாப்பச் சேவையின் தலைமையகத்தில் நடந்த மர்மான சப்பவத்தை அடுத்து அங்கு தூநாற்றம் வீசுவதாக தொழிலாளர்கள் தெரிவித்ததையடுத்து அக்கட்டிடத்தில் பணியாற்றிய 500க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் உட்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பெற்றுள்ளனர்.
முதலில் சந்தேகத்திற்கிடமான வாயு கசிவு கட்டிடத்திற்கு ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கட்டிடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாயு எதுவும் கண்டறியப்படவில்லை என்று பாதுகாப்பு சேவைகள் தெரிவித்தன.
இந்த எச்சரிக்கைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உள்ளூர் ஊடக அறிக்கைகள் முன்னர் கட்டிடத்தின் கூரையில் உள்ள சென்சார்கள் பாஸ்ஜீனைக் கண்டறிந்ததாக பரிந்துரைத்தன, ஆனால் அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தவில்லை.
பிளாஸ்டிக் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தயாரிக்க பாஸ்ஜீன் பயன்படுத்தப்படுகிறது மற்றும் முதல் உலகப் போரின் போது பெரும்பாலான இரசாயன மரணங்களுக்கு காரணமாக இருந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை 12:30 மணிக்கு (11:30 GMT) ஸ்டாக்ஹோம் நகர மையத்திற்கு வெளியே உள்ள சோல்னாவில் உள்ள சுவீடனின் பாதுகாப்பு சேவையான Sapo இன் தலைமையகத்திலிருந்து வந்த அழைப்பிற்குப் பின்னர் நோயாளர் காவு வண்டிகள், அவசரசேவை வாகனங்கள், காவல்துறையினர், முகக்கவசம் அணிந்த காவல்துறையினர் என பலரும் வரவழைக்கப்பட்டு கட்டிடத்திற்கு வெளியே சுற்றி வளைக்கப்பட்டது.
அனைத்து சாலைகள், நெடுஞ்சாலைளுகம் மூடப்பட்டன. கட்டிட வளாகத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான மீட்டர்களுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. கட்டிடம் பகுதியளவு வெளியேற்றப்பட்டது. உலங்கு வானூர்தி அப்பகுதிய சுற்றி வட்டமிட்டது.
கட்டிடத்திற்கு வெளி அமைந்துள்ள குடியிருப்புகளில் வசித்தவர்களின் வீடுகள் மற்றம் குடியிருப்புமாடிகளின் சாளரங்களை மூடுமாறு காவல்துறையினர் பணித்தனர்.
காவல்துறை அதிகாரிகள் உட்பட 8 பேர் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் நான்கு மணி நேரம் கழித்து அனைத்து தடைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் அகற்கப்பட்டன.
நேட்டோவின் சுவீடன் இணைவதை தடுக்கும் ஒரே நாடு ஹங்கேரியாகும். இந்நிலையில் ஹங்கேரியிடம் ஆதரவைப் பெறுவதற்காக சுவீடன் பிரதம மந்திரி உல்ஃப் கிறிஸ்டெர்சன் ஹங்கேரியின் தலைநகருக்கு பயணம் செய்தார். இந்த நிலையில் சுவீடனில் இச்சம்பவம் நடந்தது.
சுவீடனின் உறுப்புரிமைக்கு ஹங்கேரிய நாடாளுமன்றம் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment