இனிமேல் கதிரை ஆசையில்லை:சீவீகே

 


இலங்கை தமிழரசுக்கட்சிக்கு தெரிவு செய்யப்படும் செயலாளர் தன்னிச்சையாக செயற்பட முடியாதெனவும் அது கட்சி யாப்பிலும் தெளிவாக உள்ளதென தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி பேசுபொருளாக அமைந்துள்ளது. நடப்பாண்டு வருடம் தேர்தல் காலம் என்பதால் இப்போது அதைப் பற்றியே பலரும் பேசி வருகின்றனர்.

பலராலும் பரிகசிக்கப்படுகின்ற நிலைக்கு வந்துள்ளோம். அதில் யார் சரி பிழை என்பதற்கு அப்பால் போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும். கட்சிக்குள் பிளவுபடவிடாமல் செயற்பட வேண்டும்.

இனிமேல் கட்சிக்குள் எந்த பதவிக்கும் போட்டி இருக்குமானால் அதில் நான் பங்குகொள்ளமாட்டேன். அதனைத் தவிர்த்து கொள்வேன்.

கட்சியின் தலைவர் செயலாளர் உட்பட நிர்வாகமொன்று தெரிவு செய்யப்படுகின்ற போது கட்சியின் அனைத்து பொறுப்புக்களும் தலைவரிடமே இருக்கும்.

ஆனாலும் தலைவரது பணிப்பிற்கமைய நிர்வாக கடமைகளை செயற்படுத்துகின்ற ஒருவராகவே செயலாளர் இருப்பார். அதனை விடுத்து செயலாளர் தன்னிச்சையாக செயற்பட முடியாது என்றே கட்சி யாப்பிலும் இருக்கின்றது” என்றும் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.


No comments