புலிகளின் கால தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்


விடுதலைப் புலிகளின் காலத்தில்  வடகிழக்கில் தமிழ்ச் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். 

 நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

கடந்த 15 ஆம் திகதி  தலைமன்னாரில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது.10 வயது நிரம்பிய பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் செய்யப்பட்டு மெல்லிய நூலினால் கழுத்து நெரிக்கப்பட்டு  கொல்லப்பட்டார்.

நாட்டில் பெண்கள் , சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே காணப்படுகிறது. விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ்ச் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருந்தது.

1998 ஆம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஒருவருக்கு முல்லைத்தீவு புலிகளின்நீதிமன்றில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு, அவருக்கு புதுக்குடியிருப்பு சந்தியில் பொது மக்கள் முன்னிலையில் கட்டி வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இங்கு  எமது சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதன் மூலமே பெண்கள் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என தெரிவித்தார். 

No comments