விபத்தில் சிக்கிய யாழ்.பிரபல வர்த்தகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் நோயாளர் காவு வண்டியுடன் விபத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த வர்த்தகர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். 

வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த சண்முகதாஸ்  தர்மதாஸ் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ்.நகர் பகுதியில் வர்த்தக நிலையம் நடாத்தி வரும் , இவர் , வர்த்த நிலையத்தை மூடி விட்டு , மோட்டார் சைக்கிளில் தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை , ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் நோயாளர் காவு வண்டியுடன் விபத்துக்கு உள்ளானார். 

விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

No comments