சிறை சென்றார் கஜேந்திரன்!



'பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலே தடுத்து வைத்திருப்பது என்பது மிகவும் கொடூரமான செயல் என்பதுடன் தடுத்து வைக்கப்பட்ட அறுவரில் ஒரு நபர் சுகயீனம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்  என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகிய இருவரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இருவரும் இன்று(13) சிறைக்கு சென்று பார்வையிட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ''பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலே தடுத்து வைத்திருப்பது என்பது மிகவும் கொடூரமான செயல் என்பதுடன் தடுத்து வைக்கப்பட்ட அறுவரில் ஒரு நபர் சுகயீனம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவர்களுக்கு பிணை வழங்குமாறு குடும்பத்தினால் கோரப்பட்டபோதும் இதுவரை பிணை வழங்கப்படவில்லை. தமிழ் மக்களுடைய ஜனநாயக உரிமைகளை மறுத்து, ஒரு கொடூரமான அடக்கு முறைக்குள் வைத்துக் கொண்டு உலக நாடுகளிலே ஜனநாயகம் பற்றியும் மனித உரிமை பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்  என தெரிவித்துள்ளார் .

No comments