இஸ்ரேலுக்கு உளவு பார்த்தாக 15 பேர் சிறையில் அடைப்பு


இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 34 பேரில் 15 பேரை விசாரணைக்காக சிறையில் அடைக்க இஸ்தான்புல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று துருக்கியின் நீதி அமைச்சர் யில்மாஸ் துங்க் அறிவித்துள்ளார்.

துருக்கியில் வாழும் வெளிநாட்டு பிரஜைகளை உளவு பார்த்தல் மற்றும் பின்தொடர்தல், தாக்குதல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டதாக சந்தேக நபர்கள் கடந்த செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இஸ்ரேலிய உளவுத்துறை சார்பாக அரசியல் அல்லது இராணுவ உளவு வேலைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டின் பேரில் 26 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

No comments