யாழ்.பல்கலை;ஒரு செல்பி பிள்ளையம்மா ?



யாழ்ப்பாணத்திற்கான ரணிலின் வருகை பல முகமூடிகளை உரித்துப்போட்டுவிட்டமை தொடர்பில் ஆர்வலர்கள் பலரும் பேசிக்கொள்கின்றனர்.

அதிலும் அனைவரிற்கும் தமிழ் தேசிய அரசியல் பற்றி பிரசங்கம் செய்யும்  துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராசா ரணிலுடன் செல்பி போட்டவிற்கு கூழை கும்பிடு போட்டமை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இன்னொருபுறம் ஊடகங்களது ஒலிவாங்கிகள் முன்னராக கடும் தேசியம் பேசும் மாணவர் ஒன்றிய தம்;பிகள் கட்டியிருந்த கோமணங்கள் அவிழ்ந்து தொங்கியதும் பகிரங்கமானது.



அதிலும் ஒரு படி மேலே சென்று தனது விருப்பத்திற்குரிய நண்பிக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பதவி தராவிட்டால் பல்கலைக்கழகத்தையே முடக்குவேன் என மிரட்டிய கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் தம்பி, ரணிலின் காலடியிலேயே விழுந்து விட்டதனை அனைவரும் கிசுகிசுத்துக்கொண்டனர்.

டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் யார் கதிரையிலிருந்தாலும் பிழைப்பிற்காக ஆட்சியாளர்களை ஒட்டிக்கொண்டு கூழைக்கும்பிடு போடுவதும் பின்னர் அதனை சாதனையாக்குவதும் தொடர்கதையாகும்.அதனால் அது பற்றி தமிழ் மககள் அலட்டிக்கொள்வதில்லை. 



ஆனால் மறுபுறம் தமிழ் தேசியத்தினை பற்றி விரிவுரை நடாத்தும் சிறீசற்குணராசாவும் மறுபுறம் தனது விருப்பத்திற்குரிய நண்பிக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பதவி தராவிட்டால் பல்கலைக்கழகத்தையே முடக்குவேன் என மிரட்டிய கலைப்பீட தலைவரும் காலடியில் வீழ்ந்து சந்தி சிரிக்கவைத்துவிட்டனர்.

முன்னொரு காலத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்கள் என்பவர்கள் தேசியத்திற்காக உயிரையும் கொடுப்பவர்களாக இருந்தனர்.

துணைவேந்தர்கள் என்பவர்கள் புத்திஜீவிகளாக தேசத்தை நிர்மாணிப்பவர்களாக இருந்தனர்.

ஆனால் இன்று பதவியை நீடிக்கவும் காதலிகளிற்கு பதவி பெற மிரட்டுபவர்ளாலும் யாழ்.பல்கலைக்கழக மாண்பு நாசமாகியிருப்பதாக கவலை கொண்டுள்ளனர் முன்னாள் தலைவர்கள்.




No comments