அவமதிக்கப்பட்டார் சித்தர்!
ரணிலின் வருகையினை அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துவிட தானாக சென்று அவமதிக்கப்பட்ட சித்தார்த்தன் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
கிளிநொச்சி – பூநகரியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் நிகழ்வொன்றிற்கு வருகை தந்திருந்தார். பூநகரி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல்கள் இன்று (05) மாலை இடம்பெற்றது.
இந்நிலையில் அங்கு வந்து சேர்ந்த சித்தார்த்தன் கதிரை ஒதுக்கப்படாத நிலையில் அதிகாரிகள் கதிரையில் அமர்ந்து கொண்டார்.எனினும் அங்கு வந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் அவரை கதிரையிலிருந்து வெளியேற்றினர்.
தனக்கு ஒதுக்கப்பட்ட கதிரை ஏதுமுள்ளதாவென தேடி அலைந்த சித்தார்த்தனை ஜனாதிபதியை வரவேற்க அதிகாரிகள் அழைத்து சென்றுவிட்டனர்.
நிகழ்வு தொடங்கிய பின்னர் மீண்டும் கதிரையினை தேடிய அவரை முக்கியஸ்தர்களாக இருந்த ரணிலோ,டக்ளஸ்,ஆளுநர் மற்றும் அங்கயன் தரப்பு கண்டுகொள்ளவில்லை.
இறுதியில் ஆளுநர் அருகாகவுள்ள வெற்று கதிரையில் சித்தார்த்தன் அமர்ந்துகொண்டார்.
மதியாதார் வாசல் மிதியாதேயென முதுமொழி இருக்க ஏன் சித்தார்த்தன் போன்றவர்கள் கௌரவத்தை கெடுத்துக்கொள்கின்றார் என கேள்வி எழுப்பியிருந்தனர் பொதுமக்கள்.

Post a Comment