வம்புக்கு இழுக்கும் மனோ:நாலு வருடம்
கடந்த நான்கு வருடங்களாக அரசாங்கத்தின் பதவிகளில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளிடம், நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என பகிரங்க சவால் விடுததுள்ளார் மனோகணேசன்.
அபிவிருத்தி செய்ய நிதி இல்லை என்பீர்கள். சரி, அபிவிருத்தியை விடுங்கள். அரச நிர்வாகரீதியாக தமிழ் மக்கள் தொடர்பில் நீங்கள் அமைச்சர்களாக, துணை அமைச்சர்களாக, அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக இதுவரை என்ன செய்து கிழித்துள்ளீர்கள் என பகிரங்கமாக சொல்லுங்கள் எனவும் மனோகணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேண்டுமானால், நாம் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளையும், இன்று நீங்கள் இந்த நான்கு ஆண்டுகளில் செய்ய தவறிய சீர்கேடுகளையும் நான் பகிரங்கமாக பட்டியல் இடுகிறேன் எனவும் மனோகணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசில் அமைச்சு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா மூலம் தாங்கள் சாதித்துவருவதாக சொல்லிக்கொள்ளும் நிலையில் மனோகணேசன் வம்புக்கிழுத்துள்ளார்.
Post a Comment