திருந்தமாட்டாத கும்பல்!

ராஜீவ் கொலை குற்றச்சாட்டில் விடுவிக்கப்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன் உள்ளிட்டவர்களது விடுதலைக்காக பல

தரப்புக்களும் 

குரல் எழுப்ப தொடங்கியுள்ளன. தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டி. வெங்கடேஸ்வரன் அவர்களோடு தொலைபேசியில்  உரையாடினேன்.சாந்தனை நாட்டுக்கு அழைப்பது தொடர்பான தேவையான உரிய ஆவணங்கள் அடங்கிய கடிதம் வெளிவிவகார அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது என தெரிவித்த அவர், சாந்தனை சிறப்பு முகாமிலிருந்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான இந்திய பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை உத்தியோகபூர்வமாக தாம் கோரியுள்ளதாக அறியத்தந்திருப்பதாக   நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சாந்தன் இலங்கை வருவதற்கு உதவுமாறு அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தாவிடம் வயோதிப தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளமையினை அவரது  கட்சி பிரச்சாரப்படுத்திவருகிறது. பல வருடங்களாக சிறையில் தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்ட இலங்கையரான சாந்தன் சுகயீனம் காலணமாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதரர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து உதவுமாறு கேட்டுக் கொண்டதாக தெரியவருகின்றது.

No comments