இரணைமடு கதை போல பாலியாற்றுக்கதையுமா?



ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 5ம் திகதி அங்குரார்ப்பணம் செய்யவுள்ள பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்திற்கு எதிர்ப்புக்கள் வலுத்துள்ளது.

அதனால் விவசாயிகளது நலனுக்கு எதுவித பாதகமும் நிகழக்கூடாது என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு போகும் செயற்றிட்டம் ஆரம்பிக்கவுள்ளது. ஆனால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளது நலனுக்கு எதுவித பாதகமும் நீண்ட கால அடிப்படையில் நிகழக்கூடாது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார்ந்த திணைக்களங்களுடனும் விவசாயிகளுடனும் தீர்க்கமான உரையாடல் மேற்கொள்ளப்படவில்லை.

358 ஹெக்டேயருக்கு மட்டுமே நீர்பாசனம் வழங்குவதாக் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது 513 ஹெக்டேயர் பயிர் செய்யப்படுவதாக கமநல சேவை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை குறைந்த காலத்தில் தாங்கள் அமைக்க இருக்கும் நீர்த்தேக்கத்திலிருந்து எப்படி நீரை விடுவிப்பதென கேள்வி உள்ளது.

குடிநீருக்கா? அல்லது விவசாயத்திற்கா? முதன்மைப்படுத்துவது எனும் நிலை உருவாகும். 

அது மாத்திரமன்றி கோடை காலத்தில் பாலியாற்று நீர் வராவிட்டால் நிலத்தடி நீர் குறைவடையும். அதனால் பாலியாற்றுக்கரையின் இருபுறமும் உள்ள மேட்டுநில செய்கை விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும்.

பாலியாற்றில் மழை காலத்தில் கடலுக்குள் கலக்கும் உபரி நீரை யாழிற்கான குடிநீர் திட்டம் உருவாக்குகிறோம் எனும் போர்வையில் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு விடுமோ என அந்தப் பகுதி விவசாயிகள் அஞ்சுகின்றனர் எனவும் சிவகரன் தெரிவித்துள்ளார்.


No comments