வால்மீகி சர்வதேச விமான நிலையம் திறப்பு!



இந்தியாவின்  உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில்  அமைக்கப்பட்ட   புதிய விமான நிலையம் நாளை (30) இந்திய பிரதமர் நரேந்திர மோடி  திறந்து வைக்கவுள்ளார்.   இந்த விமான நிலையத்துக்கு  மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம்  என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிஉள்ளதுடன் எதிர்வரும் ஜனவரி 22-ஆம்  திகதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளுடன் விமான நிலையம்  திறந்து வைக்கப்படவுள்ளது.  

 குறித்த மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் இந்து சமயத்தையும் தமிழ் கலாசாரத்தையும் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் இதேபோல திருச்சியில் அமைக்கப்பட்ட விமான நிலைய புதிய பயணிகள் முனையம் ஜனவரி 2 ஆம் திகதி  இந்திய பிரதமரால் திறந்து வைக்கப்படவுள்ளது. 

இந்த விமான நிலையம்  ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முகப்பில் வண்ணமயமாக பார்ப்போர் கண்களை கவரும் வகையில் அமைக்கப்படுவதுடன் ஒவ்வொரு நுழைவாயில் வெளியேறும் வகையில் இந்து ஆலய கோபுரங்கள் போலவும் உள் சுவர்களில் இந்து மற்றும் தமிழ் கலாசாரத்தை வெளிப்படுத்தும் திரைகள் நடராஜ சிற்பங்கள் இந்து கடவுள்களும் அமைக்கப்பட்டுள்ளன.

No comments