யேர்மன் நாட்டவர் பாரிசல் கொலை!! மேலும் இருவர் காயம்!!
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரின் பின்னணியில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகில் நேற்றிரவு 9 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கத்திக்குத்துத் தாக்குதலில் யேர்மனி நாட்டைச் சேர்ந்த இளம் வயதுடைய ஒருவரும் மேலும் இருவரும் காயமடைந்தனர்.
இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து யங்கரவாத சம்பவங்களில் நிபுணத்துவம் பெற்ற சட்டவாளர்கள் வழக்கைத் தொடங்கியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர் ஈரானியப் பெற்றோருக்கு 1997 ஆண்டு பிறந்த ஒரு பிரஞ்சு நாட்டவர் என அடையாளம் காணப்பட்டார்.
தாக்குதலுக்கு கத்தி மற்றும் சுத்தியல் பயன்படுத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் 23 வயது இளைஞரை கொலை செய்ததாக வழக்குரைஞர்கள் சந்தேகிக்கின்றனர். கொல்லப்பட்டவர் யேர்மன் - பிலிப்பைன்ஸ் குடிமகன் என பிரஞ்சு நீதிமன்றில் ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டது.
66 வயதான பிரிட்டிஷ் குடிமகன் மற்றும் 60 வயதான பிரெஞ்சு நாட்டவர் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
சந்தேகத்திற்குரிய இஸ்லாமிய தாக்குதலில் கொல்லப்பட்ட யேர்மன் இளைஞன் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தனது எண்ணங்கள் இருப்பதாக யேர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக்கூறினார்.
வெறுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு ஐரோப்பாவில் இடமில்லை," என்று அவர் மேலும் கூறினார்.
பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட யேர்மனியின் குடும்பத்திற்கு தனது இரங்கலை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்தெரிவித்தார்.
Post a Comment