தை மாதம் வரை தேனீர் வேண்டாம்:டக்ளஸ்!
இலங்கை அரசியலை சீனி மீண்டும் ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது.ஏற்கனவே கோத்தபாய சீனி விலையினை இறக்குமதியாளர்களிற்கு பில்லியன்களில் வருமானம் ஈட்ட ஏதுவாக அதிகரித்து ஜனாதிபதி கதிரையிலிருந்து விரட்டப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வடக்கிலுள்ள மக்கள் தை மாதம் வருகை தரவுள்ள இந்திய கப்பலில் வரும் சீனிக்காத்திருக்க அரச அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ சீனி விலை கறுப்புச்சந்தையில் 350 இனை தாண்டியுள்ள நிலையில் 280 ரூபாவிற்கு மேற்படாமல் மக்களுக்கு சீனி விநியோகம் இடம்பெற வேண்டும். தை மாதம் நாகப்பட்டனத்திலிருந்து பயணிகள் கப்பலுடன் சரக்கு கப்பலும் வரும். சரக்கு கப்பலில் வரும் பொருட்கள் கூட்டுறவு சங்கங்கள் ஊடக மக்களுக்கு விநியோகிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார்.
Post a Comment