மாத்தளையிலும் புலிக்கொடி!



இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட தமிழீழ புலிகள் அமைப்பின் சின்னத்தை ஸ்டிக்கராக முச்சக்கரவண்டியில் ஒட்டிவைத்த சாரதி ஒருவர் இன்று(10) கைது செய்யப்ட்டுள்ளார்.


மாத்தளை கந்தேநுவர பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


மேற்படி விடயம் தொடர்பில் கந்தேநுவர காவல்துறையினர் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட நபர் ஜா எல பிரதேசத்தில் உள்ள எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றியவர் ஆவார்.


குறித்த நபர் விடுமுறைக்காக மாத்தளையில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.” என்றனர்.

No comments