நிக்கல் ஆலையில் வெடிப்பு: இந்தோனேசியாவில் 13 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் கிழக்கே அமைந்துள்ள நிக்கல் பதப்படுத்தப்படும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் கொல்லப்பட்னர். மேலும் 38 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுலவேசித் தீவில் அமைந்துள்ள மொரோவாலி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள இரும்பு ஆலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரப்படி 5.30 மணியவில் இச்சம்பவம் நடத்தது.
உயிரிழந்தவர்களின் 8 இந்தோனேசியர்களும் 5 சீனத் தொழிலாளர்களும் அடங்குவர்.
38 தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தலைவர் கூறினார்.
உலை பழுதுபார்க்கும் பணியின் போது ஏற்பட்ட வெடிப்பு ஏற்பட்டது. அங்கு எரியக் கூடிய திரவத்தை பற்ற வைத்தபோது அருகில் இருந்து ஒக்ஸிசன் நிரப்பி வைக்கும் கொல்கலன்களை அது வெடிக்க வைத்தது.
சுலவேசி தீவு இந்தோனேசியாவின் நிக்கல் உற்பத்திக்கான மையமாகும். து மின்சார வாகன பேட்டரிகளுக்கு இன்றியமையாதது. இது சீனாவுக்குச் சொந்தமான ஆலையாகும்.
இந்த வெடிப்பில் இறந்தவர்களின் முகங்கள், உடல்கள், ஆடைகள் எரிக்கப்பட்டன. கட்டிடங்களின் சுவர்கள் அதிர்வில் தேசமடைந்தன.
இதே தொழிற்பேட்டையில் உள்ள நிக்கல் உருக்கும் ஆலையில் கடந்த ஜனவரியில் ஒரு சீன ஊழியர் உட்பட இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் ஜூன் மாதம் அதே ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.

Post a Comment