லிபியாக் கடற்கரையில் கப்பல் மூழ்கியது: 61 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழப்பு
மத்தியதரைக் கடலில் லிபியக் கடற்கரையில் 61 புலம்பெயர்ந்தவர்கள் கப்பலில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுவதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) சனிக்கிழமை பிற்பகுதியில் தெரிவித்துள்ளது.
உயிரிந்தவர்களின் பெரும்பாலானோர் நைஜீரியா, காம்பியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.
லிபியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள சுவாராவில் இருந்து புறப்பட்ட படகில் 86 பேர் இருந்ததாக சாட்சிகள் தெரிவித்தன.
கடலில் உயிர் பிழைத்த 25 பேரையும் அதிகாரிகள் லிபியாவில் உள்ள தடுப்பு மையத்திற்கு மாற்றியுள்ளனர்.
உயிர் பிழைத்தவர்களுக்கு மருத்துவ உதவியை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மேலும் கூறியது.
Post a Comment