முன்னணி:விலகியே இருப்போம்!
தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோரிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காமல், அதனைப் பகிஸ்கரிப்பதொன்றே தமிழ்மக்களுக்கு இருக்கின்ற தெரிவு எனவும், அதனையே தாம் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற கதை தமிழ் அரசியல் களத்தில் ஒரு சிலரால் பரப்பப்படுகின்றது. அவ்விடயம் தொடர்பாக ஒரு சில தரப்புகள் பெயர்களை கூட முன்மொழிந்திருக்கின்றார்கள்.
குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் தானாகவே முன்வந்து, அனைத்துக் கட்சிகளும் இணங்கி தனது பெயரை முன்மொழிந்தால் அதனைப் பரிசீலிப்பதற்குத் தயார் என்று கூறியிருக்கின்றார்.
அதேவேளை மனோகணேசனை பொதுவேட்பாளராக நிறுத்தவேண்டுமென பிறிதொரு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெல்லக்கூடியது ஏதேனுமொரு சிங்களத்தரப்பே என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது .
இருப்பினும் அது யாராக இருப்பினும், கடந்தகாலங்களில் தமிழர்களுடன் தொடர்புபட்ட அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், பாதுகாப்பு, காணி அபகரிப்பு, பயங்கரவாதத்தடைச்சட்டப் பிரயோகம், அரசியல்கைதிகள் விடுதலை, வட-கிழக்கில் பௌத்த சிங்களமயமாக்கம் போன்ற பல்வேறு விடயங்களில் தமிழ்மக்களுக்கு சார்பாக செயற்பட்டதில்லை.
அதேவேளை அரசியல் தீர்வு விவகாரத்தில் அனைவரும் ஒற்றை ஆட்சியையும், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தையும் வலியுறுத்துகின்ற நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ள கஜேந்திரகுமார் தேர்தலில் தமிழ் விலகியிருப்பதே பொருத்தமானதெனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment