தாக்குதல் நடத்த வந்தாரா?

 


அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இறக்கப்பட்ட ஆதரவாளரால் தமிழ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அச்சுறுத்தப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில் கூட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்நிலையில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீன்பிடி அமைச்சர் இந்தியாவில் போய் பேசுவோம் பேசுவோம் என கூறுகிறார்.இங்கே இலங்கை கடற்படை எதற்குள்ளது? இலங்கை அரசாங்கம் என்ன செய்கிறது என கேள்வி எழுப்பினாhர்.

இந்நிலையில் இடையில் குறிக்கிட்ட வடமராட்சி மீனவர் சங்கப்பிரதிநிதி அச்சுறுத்தும் பாணியில் மிரட்டியதோடு செல்வராசா கஜேந்திரனை தாக்கும் நோக்குடன் அவரை நோக்கியும் வருகை தந்திருந்தார்,

இதனையடுத்து அங்கு வந்த  பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் நிலைமை கட்டுக்குள் வந்ததோடு அமைச்சர், கட்சி ஆதரவாளர்களை அழைத்து கட்சி கூட்டத்தை நடத்துவதாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், குற்றம் சாட்டினர்.

எனினும் அமைச்சரோ அந்நபர் பொது அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments