பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ஆண்டிற்க்கான பொதுசுடரினை வட கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான

அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

தொடர்ந்து தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023ம் ஆண்டிற்க்கான பிரித்தானியத் தேசியக் கொடிஇளையோர் அமைப்பு செல்வி பார்பரா ராஜன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023ம் ஆண்டில் தமிழீழத் தேசியக் கொடியினை பிரித்தானியத் தமிழர் ஒருங்கமைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. ஆனந் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் புதல்வன் பிரபாநந்தன் அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் சுடர் ஏந்தி மலர்வணக்கத்தினை செலுத்தினார்கள்.


No comments