சங்குப்பிட்டிப் பாலம் இடிந்து விழும்!



பிரிட்டன் அரசினால் பெரும் பிரச்சாரங்களுடன் கட்டிவழங்கப்பட்ட பூநகரி சங்குப்பிட்டிப் பாலம் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தை எட்டியுள்ளது.

அதேவேளை பல மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பூநகரிப்பாலம் பல மாதங்களாக இரவு வேளையில் மின்விளக்குகள் ஒளிராமையால் இருளில் மூழ்கிக் கிடக்கின்றது.

நூற்றுக்கணக்கான சூரியப்படல் மின்கலங்களினூடாக தன்னியக்கமாகவே இரவு வேளையில் ஒளிரக்கூடியதாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அழகுற காணப்பட்ட பூநகரி சங்குப்பிட்டி பாலம் பலமாதங்களாக கவனிப்பாரற்ற நிலையில் ஒளியிழந்து இருளில் மூழ்கியுள்ளது.

இது மாலை வேளைகளில் அழகுற இருந்தபோது உள்ளூர் வெளியூர் சுற்றுலாவிகள் அதிகமாக சஞ்சரித்து வந்தனர்.

தற்பேது அவர்களின் வரவும் குறைந்துள்ளதோடு பாலமும் துருப்பிடித்தும் காப்பற் கழன்றும் பழுதடைந்து காணப்படுகின்றது. அத்துடன் பூநகரியிலிருந்து தனங்கிளப்பு வரையான காப்பற் வீதியும் சேதமடைந்து காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இலங்கை பெருந்தோட்ட அமைச்சரும் அபாய நிலையிலுள்ள பாலமாக பூநகரி சங்குப்பிட்டிப் பாலமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments