விமானமும் காரும் நேருக்கு நேர் மோதியது!!


அமெரிக்கா அவசரமாகத் தரையிறங்க முயன்று விமானமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சாலையில் சென்ற காரின் மீது விமானம் மோதியதில் கார் ஓட்டுநர் காயமடைந்தார்.

டெக்ஸாஸில் உள்ள மிட்லேண்ட் என்ற இடத்தில் இருந்து வந்த சிறிய ரக விமானம், டல்லாஸ் புறநகர்ப் பகுதியான மெக்கின்னியில் அவசரமாகத் தரையிறங்க முயன்றது.

இதில் ஓடுபாதையில் இருந்து விலகிய அந்த விமானம், வேலியை உடைத்துக் கொண்டு சாலையின் பக்கம் திரும்பியது. அதே நேரத்தில் சாலையில் வந்து கொண்டிருந்த காரும், விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின.

இந்த விபத்தில் காயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments