பனிப்போர் கால உடன்படிககையிலிருந்து வெளியேற்றம் இறுதியானது


நேட்டோவுடனான பனிப்போர்க் கால பாதுகாப்பு உடன்படிக்கையின் செயல்பாட்டை இடைநிறுத்துவதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது என்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய பின்னர், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களில் இது சமீபத்தியது.

1990 இல் கையொப்பமிடப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட ஐரோப்பாவில் உள்ள மரபுசார் ஆயுதப் படைகளுக்கான ஒப்பந்தம் (CFE), பனிப்போர் போட்டியாளர்கள் தங்கள் பரஸ்பர எல்லைகளுக்கு அருகே இராணுவப் படைகள் மற்றும் உபகரணங்களை குவிப்பதைத தடுக்க முயன்றது.

ரஷ்யா முன்பு 2007 இல் ஒப்பந்தத்தில் பங்கேற்பதை நிறுத்திக் கொண்டது மற்றும் 2015 இல் முழுமையாக விலகுவதாக அறிவித்தது. ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவது செவ்வாயன்று இன்று இறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவின் நடவடிக்கைகள் மற்றும் நேட்டோ உறுப்பினர்களை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவை மாஸ்கோ ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு காரணம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

சிஎஃப்இ ஒப்பந்தம் அதன் அசல் வடிவில் யதார்த்தத்துடன் தொடர்பை இழந்துவிட்டது என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மே மாதம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் ஆணையில் கையெழுத்திட்டார். இது நேட்டோவிடமிருந்து விரைவான கண்டனத்தைப் பெற்றது.

No comments