18 கரட் தங்க கழிப்பறை திருட்டு: திருடப்பட்ட நான்கு பேர் மீது குற்றம் சாட்டு!!
4.8 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தங்கக் கழிவறையை திருடிய நான்கு பேர் மீது இங்கிலாந்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செப்டம்பர் 2019 இல் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள பிளென்ஹெய்ம் அரண்மனையில் இருந்து திருடப்பட்டது. தேம்ஸ் வலே காவல்துறையினர் தற்போது நான்கு பேர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னாள் பிரதம மந்திரியும் போர்க்காலத் தலைவருமான சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறந்த இடமான பிளென்ஹெய்ம் அரண்மனையில் இந்த கழிப்பறை நிறுவப்பட்டது.
தங்க கழிவறை முன்பு 2016 இல் நியூயார்க்கின் குகன்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது, அங்கு பார்வையாளர்கள் அதைப் பயன்படுத்தலாம், பாதுகாப்பு ஊழியர் ஒருவர் வெளியே காவலில் நின்றார்.
38 வயது மைக்கல் ஜோன்ஸ் (Michael Jones), 39 வயது ஜேம்ஸ் ஷீன் (James Sheen), 35 வயது ஃபிரெட் டோ (Fred Doe), 39 வயது போரா குக்குக் (Bora Guccuk) ஆகிய 4 ஆடவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர்கள் நவம்பர் 28 ஆம் தேதி ஆக்ஸ்போர்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
காட்சிக்கு வைக்கப்பட்ட இரண்டே நாளில் அந்தத் தொட்டி களவாடப்பட்டது.
தொட்டியின் மதிப்பு சுமார் 6 மில்லியன் டொலர் என்று தெரிவித்தது.
Post a Comment