யாழில். மகன் உயிர்மாய்க்க முயன்ற தகவல் அறிந்து தந்தை உயிரிழப்பு


தனது மகன் உயிர்மாய்க்க முயன்ற தகவல் அறிந்து , மயங்கி சரித்தவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தியை சேர்ந்த முத்துத்தம்பி விவேகானந்தன் (வயது 71) என்பவரே உயிரிழந்துள்ளார். 

இவரது இரண்டாவது மகன் நேற்றைய தினம் புதன்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனும் தகவலை வீட்டில் இருந்த நிலையில் அறிந்தவர் உடனே மயங்கி சரிந்துள்ளார். 

அதனை அடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

அதேவேளை தவறான முடிவெடுத்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகன் யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். 

No comments