ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகள் ஆரம்பம்!

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது சிரமதான பணிகள் ஆரம்பமாகின.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் ஆலச்குளம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் இன்று (01) மாலை  ஆரம்பிக்கப்பட்டது.

முன்னதாக மாவீரர் களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி   அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

No comments