60 கைது:54 விடுதலை!
மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பல்கலைக்கழக மாணவர்களை பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக 60 மாணவர்கள் கைது செய்யப்பட்ட போதும் பின்னர் 54பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை 9 மணிக்கு சித்தாண்டி முருகன் ஆலையத்துக்கு முன்னால் ஒன்று கூடிய மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளரின் இடம் வரை சென்று அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதற்கும் பொது வீதி போக்குவரத்துக்கு இடையூறு விளைத்த குற்ற்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment