அரச ஊடகங்களே அரசை கண்டுகொள்வதில்லையாம்!
இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரச ஊடகங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை எனவும் அவை உரிய விளம்பரத்தை வழங்கவில்லை எனவும் ஊடகத்துறை அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பல்வேறு பாழடைந்த கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும் பொதுமக்களின் அசௌகரியங்களை பொது ஊடகங்கள் ஒளிபரப்பும் அதேவேளை அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்பன பொது நிறுவனமாக மாற்றப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்தித்து வருவதாக வெளிப்படுத்தப்பட்டது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 2023 இல் 277 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 2023 இல் ரூ. 457 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment