பாரிஸ் ஏலத்தில் விற்பனைக்கு வருகிறது நெப்போலியனின் தொப்பி


19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் பேரரசை ஆண்ட நெல்போலியன் போனபார்டேயின் தொப்பி இன்று ஞாயிற்றுக்கிழமை பாரிசில் ஏலத்தில் விற்பனைக்கு வருகிறது.

பைகார்ன் பிளாக் பீவர் ஃபீல்ட் தொப்பி 6 இலட்சம் யூரோ தொடக்கம் - எட்டு இலட்சம் யூரோ (£525,850-£701,131) வரை மதிப்பிடப்படுகிறது.

அத்துடன் தலையணை நெப்போலியனின் பிராண்டின் ஒரு பகுதியாக இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். 

நெப்போலியன் 120 பைகார்பன் தொப்பிகளை பல ஆண்டுகளாக வைத்திருந்தார். தற்போது 20 தொப்பிகளை் மட்டுமே எஞ்சியிருக்கிறது எனக் கருதப்படுகிறது. இவை ஒவ்வொரு தனியாரும் சேகரித்து வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு இறந்த தொழிலதிபர் ஒருவரால் சேகரிக்கப்பட்ட மற்ற நெப்போலியன் நினைவுப் பொருட்களுடன் தொப்பி விற்கப்படுகிறது.

இதுவே நெப்போலியனின் பேரரசின் சின்னமாக விளங்கியது. நெப்போலியன் எப்போதும் போர்க் களங்களிலும் ஏனைய இடங்களிலும் இதனை அணித்திருப்பார். இத்தொப்பி தெரியும் இடத்தில் நெப்போலியன் இருக்கிறார் என்பதை மக்களுக்கு இத்தொப்பி அடையாளப்படுத்தியது.

1815 ஆம் ஆண்டு வாட்டர்லூவில் நெப்போலியன் தோல்வியடைந்த பின்னர் நெப்போலியன் வண்டியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளி சாப்பாட்டுத் தட்டு, ரேஸர்கள், வெள்ளி பற்தூரிகை, கத்தரிக்கோல் மற்றும் பிற உடமைகளுடன் அவர் வைத்திருந்த மர வேனிட்டி கேஸ் ஆகியவை விற்கப்படும் மற்ற பொருட்களில் அடங்கும்.


No comments