இஸ்ரேலில் தாக்குதலில் 7 பணயக் கைதிகள் பலி!


இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 7 பணயக் கைத்திகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறியுள்ளது. காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் ஏழு பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் மூன்று வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களும் உள்ளடங்குவதாக அல்-கஸ்ஸாம் படையணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 7 தாக்குதலில் ஹமாஸ் 239 பணயக் கைத்திகள்  பிடித்துச் சென்று ஹாசாப் பகுதியில் வைத்துள்ளனர்.

அமெரிக்கா, ஜெர்மனி, கனடா மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ், பணயக் கைதிகளில் நான்கு பேரை மட்டுமே இதுவரை விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 7 பணயக் கைத்திகள் கொல்லப்பட்டதாக ஹமாசின் இராணுவ அமைப்பான அல்-கஸ்ஸாம் படையணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments