வீதியின் கீழும் நீளும் புதைகுழி!



முல்லைதீவு மனிதப்புதைகுழி வீதியின் கீழாகவும் நீண்டும் செல்கின்றமை அம்பலமாகியுள்ளது.இரண்டு முதல் மூன்று அடுக்குகள் வரை உடலங்கள் காணப்படுவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கைகள் பின்புறமாக கட்டப்பட்டுள்ளதுடன் கொல்லப்பட்ட உடல தடையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இறுதி யுத்த காலத்தில் காணப்பட்ட நீண்ட பதுங்குகுழி தொடரினுள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

எனினும் ஸ்கேனர் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளது அறிக்கை விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

இதனிடையே முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் நேற்று இடம்பெற்ற அகழ்வின்போது 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சன்னங்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் கையில் அணியப்படும் இலக்கத் தகடு ஒன்றும், மணிக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அகழ்வுப் பணி  ஞாயிற்றுக்கிழமை இடம்பெறாது என்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி க.வசுதேவா தெரிவித்துள்ளார்.


No comments